தென்னிந்திய படவுலகில் தற்போதைய சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர், ஸ்ரீலீலா. ‘பராசக்தி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், இதில் ஏற்று நடித்த ரத்னமாலா என்ற கேரக்டர் ரசிகர்களை ெபரிதும் கவர்ந்தது. இதுவரை நடனத்துக்காக மட்டுமே பாராட்டு பெற்ற ஸ்ரீலீலா, முதல்முறையாக தனது நடிப்புக்காகவும் ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீலீலா ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுராக் பாசு இயக்கத்தில் உருவாகும் ரொமான்டிக் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் அவர், அதில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் சிவப்பு நிற லெஹங்கா அணிந்து, அந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் அணிந்திருந்த லெஹங்காவின் விலை, சுமார் 3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் ஆகும்.
