கடந்த ஆண்டு மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா, பாரதிராஜா நடிப்பில் வெளியான ‘தொடரும்’ என்ற படம், 230 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இதை இயக்கிய தருண் மூர்த்தி, மீண்டும் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். மோகன்லாலின் 366வது படமாக உருவாகும் இப்படத்துக்கான தொடக்க விழா பூஜை, வைக்கம் மகாதேவ கோயிலில் நடந்தது. வரும் 23ம் தேதி முதல் கேரளாவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் ஹீரோயினாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.
ஏற்கனவே மோகன்லாலுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள மீரா ஜாஸ்மின், சமீபத்தில் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான ‘ஹிருதயபூர்வம்’ என்ற படத்தில், கிளைமாக்ஸில் ஒரு நிமிடம் மட்டுமே வந்து செல்லும் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.
