உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்து வெற்றிபெற்றுள்ள படம், ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இதை தொடர்ந்து சிரஞ்சீவி ெவளியிட்டுள்ள உணர்வுப்பூர்வமான பதிவு வைரலாகியுள்ளது. அவர் கூறுகையில், ‘இந்த பிரமாண்டமான வெற்றியை பார்க்கும்போது என் இதயம் நன்றியுணர்வால் நிரம்புகிறது. நான் எப்போதும் உங்கள் அன்பின் விளைபொருள் என்று சொல்லி வருகிறேன். இன்று நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். இந்த சாதனை தெலுங்கு ரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், பல வருடங்களாக எனக்கு துணையாக நிற்கும் அனைத்து ரசிகர்களுக்கும் சொந்தமானது.
திரையரங்குகளில் நீங்கள் எழுப்பும் ஆரவாரமே என்னை முன்னோக்கி செல்ல வைக்கும் ஆற்றல். சாதனைகள் வரும், போகும். ஆனால், நீங்கள் என்மீது பொழியும் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குனர் அனில் ரவிபுடி, தயாரிப்பாளர்கள் சாஹூ, சுஷ்மிதா மற்றும் படக்குழுவினரின் கடின உழைப்புக்கும், என்மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஒரு காணிக்கையாகும். இந்த கொண்டாட்டத்தை தொடர்வோம்’ என்று தெரிவித்துள்ளார். இதில் நயன்தாரா, கேத்ரின் தெரசா ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
