கிராமப்புற மக்களின் கதை ‘அறுவடை’

‘லாரா’ என்ற படத்தை தொடர்ந்து எம்.கே பிலிம் மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள படம், ‘அறுவடை’. ஹீரோவாக நடித்து எம்.கார்த்திகேசன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் சிம்ரன் ராஜ், ‘பருத்திவீரன்’ சரவணன், கஜராஜ், ராஜசிம்மன், தீபா பாஸ்கர் நடித்துள்ளனர். ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, ரகு ஸ்ரவண் குமார் இசை அமைத்துள்ளார். கே.கே.விக்னேஷ் எடிட்டிங் செய்துள்ளார். கார்த்திக் நேத்தா, எம்.கார்த்திகேசன், கானா சக்தி பாடல்கள் எழுதியுள்ளனர். கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் சார்பில் கோயமுத்தூரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சாதாரண மனிதன் வீட்டில் நடக்கும் சின்ன பிரச்னை, பிறகு பூதாகரமாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற தத்துவத்தை மையப்படுத்தி ‘அறுவடை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Related Stories: