தமிழ் படவுலகை தொடர்ந்து பான் இந்தியா இயக்குனராக மாறியவர், அட்லீ. இந்தியில் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி நடிப்பில் ‘ஜவான்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்கினார். இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அல்லு அர்ஜூன், தீபிகா படுகோன் நடிக்கும் பான்வேர்ல்ட் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இதை சன் பிக்சர்ஸ் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. கடந்த 2014ல் நடிகை பிரியாவுக்கும், அட்லீக்கும் காதல் திருமணம் நடந்தது.
கடந்த 2023ல் மீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அட்லீ, பிரியா தம்பதி விரைவில் 2வது குழந்தைக்கு பெற்றோர் ஆகின்றனர். இத்தகவலை அவர்கள் தங்களது சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். அதில், ‘எங்கள் குடும்பத்துக்கு புதிதாக ஒருவர் வருகிறார். இதனால் எங்கள் வீடும், குடும்பமும் அழகாக மாறும் என்று நம்புகிறோம். உங்கள் அன்பும், ஆசியும், பிரார்த்தனையும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
