சாமி உருவ நெக்லஸ் அணிந்த விவகாரம்: நடிகை டாப்சி மீது போலீசில் புகார்

இந்தூர்: சாமி உருவ நெக்லஸ் அணிந்த விவகாரம் தொர்பாக நடிகை டாப்சி மீது மத்திய பிரதேச போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை டாப்சி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கவர்ச்சியாக அரைகுறை உடை உடுத்தி இருந்தார். அதோடு கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் அணிந்து இருந்தார். அவர் அணிந்திருந்த அரைகுறை ஆடையுடன் கடவுள் உருவம் பொறித்த நெக்லசை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்து கடவுளை அவமதித்து விட்டதாகவும் சிலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஹிந்து ரக்ஷக் சங்கதன் என்ற அமைப்பினர், சத்ரிபுரா போலீசில் அளித்த புகாரில், ‘நடிகை டாப்சி, இந்து தெய்வங்களை அவமதித்துள்ளார். ஆபாசமான நடத்தையில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சத்ரிபுரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: