‘குஷி’யுடன் மோதும் ‘சூரரைப்போற்று’

ஐதராபாத்: தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம், ‘குஷி’. ஷிவ நிர்வானா இயக்குகிறார். இப்படம் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. விஜய் தேவரகொண்டா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, லட்சுமி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராம கிருஷ்ணா, காந்த் அய்யங்கார், சரண்யா, ஆலி, ரோகிணி நடிக்கின்றனர். காதல் கதை கொண்ட இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தற்போது ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

வரும் செப்டம்பர் 1ம் தேதியன்று இப்படம் திரைக்கு வருகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள பிரத்தியேக போஸ்டரில் விஜய் தேவரகொண்டா, சமந்தா ஆகிய இருவரும் காதலுடன் கைகோர்த்தபடி தோன்றி இருப்பது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இதே ெசப்டம்பர் 1ம் தேதியன்று, இந்தியில் சுதா ெகாங்கரா இயக் கத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘சூரரைப்போற்று’ படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்‌ஷய் குமார், ராதிகா மதன், சிறப்பு வேடத்தில் சூர்யா நடித்துள்ளனர். இன்னும் ைடட்டில் முடிவாகவில்லை. சூர்யா, ஜோதிகா தம்பதியின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

Related Stories: