ஜெய்க்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு ‘தீரா காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவிதா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘அதே கண்கள்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்து குமார் இசையில், ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது. மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும்.

Related Stories: