தியேட்டரில் டிக்கெட் விற்ற நிவேதா பெத்துராஜ்

ஐதராபாத்: டிக் டிக் டிக், சங்கத் தமிழன், திமிரு புடிச்சவன் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் நடிப்பில் தஸ் கா தம்கி என்ற தெலுங்கு படம் தயாராகி உள்ளது. படம் தியேட்டர்களில் நேற்று ரிலீசானது. இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் ஹீரோயின் நிவேதா பெத்துராஜ்  ஐதராபாத்திலுள்ள தியேட்டர் ஒன்றுக்கு நேற்று சென்றார். முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். டிக்கெட் கவுன்ட்டரில் அமர்ந்த அவர், தனது கையால் ரசிகர்களிடம் பணத்தை பெற்று டிக்கெட்டுகளை வழங்கினார். இதனால் அவரிடம் டிக்கெட் வாங்க, ரசிகர்கள் முண்டியடித்தனர். வேறு படம் பார்க்க வந்த பலரும், நிவேதாவிடம் டிக்கெட் வாங்குவதற்காக இந்த படத்தை பார்க்க வந்துவிட்டனர். இந்த வீடியோ, புகைப்படங்கள் வைரலானது. இது நல்ல பப்ளிசிட்டி ஸ்டண்ட் என பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Related Stories: