கவுதம் கார்த்திக், சரத்குமார் இணைந்து நடிக்கும் கிரிமினல்

சென்னை: பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம், பிக் பிரின்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் படம், ‘கிரிமினல்’. கவுதம் கார்த்திக், சரத்குமார் நடிக்கின்றனர். தட்சிணா மூர்த்தி ராமர் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜனவரி 23ம் தேதி மதுரையில் தொடங்கியது. இதன் முழு படப்பிடிப்பையும் திட்டமிட்டபடி நடத்தி முடித்துள்ளனர்.  பிரசன்னா எஸ்.குமார் ஒளிப் பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். சினேகன் பாடல்கள் எழுதுகிறார். படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இதுபற்றி கவுதம் கார்த்திக் கூறும்போது, ‘இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் நான் நடித்துள்ள ‘1947 ஆகஸ்ட் 16’ என்ற படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன். எனது திரைப்பயணத்தில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன். இதையடுத்து ‘கிரிமினல்’ படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகும்’ என்றார்.

Related Stories: