சென்னை, மார்ச் 11: சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புது படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிஎஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான ‘பெப்பில்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். இந்த படம் பல சர்வதேச விருதுகளை வென்றது. இந்த படத்தில் நாயகனாக சூரி நடிக்க இருக்கிறார். நாயகியாக அன்னாபென் நடிக்கிறார்.