நடிகையிடம் அத்துமீறிய நபர்

வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 28’ படத்தின் 2வது பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர், சனா அல்தாப். கேரளாவை சேர்ந்த அவர், மலையாளத்தில் ‘விக்ரமாதித்யன்’, ‘மரியம் முக்கு’, ‘ராணி பத்மினி’, ‘ஒடியன்’, தமிழில் ‘ஆர்கே நகர்’, ‘பஞ்சராக்‌ஷரம்’ ஆகிய படங்களில் நடித்தார். சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் சனா அல்தாபின் சமீபத்திய பதிவு வைரலாகி வருகிறது. அதில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்ற தொழிலதிபர் தனக்கு தொடர்ந்து தவறான இ-மெயில் அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

அந்த நபர் சனா அல்தாப்புடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகவும், அதற்கு எவ்வளவு ரூபாய் செலவானாலும் பரவாயில்லை என்றும், மேலும் துபாய், மாலத்தீவு என்று எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் டேட்டிங் சென்று வரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்துள்ள சனா அல்தாப், அதை தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: