சமந்தாவுக்கு சண்டைப் பயிற்சி அளித்த ஹாலிவுட் இயக்குனர்

சென்னை: சமந்தா நடித்துள்ள ‘யசோதா’ என்ற பான் இந்தியா படம், வரும் 11ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் வாடகைத்தாய் மோசடி தொடர்பான ஆக்‌ஷன் திரில்லர் கதையுடன் உருவாகியுள்ளது. ஹரி, ஹரிஷ் இயக்கியுள்ள இதை ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார். இப்படத்தில் பல சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் சமந்தா ‘டூப்’ போடாமல் நடித்துள்ளார். அவருக்கு ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். ஏற்கனவே அவர், ‘தி பேமிலி மேன்2’ என்ற இந்தி வெப்சீரிஸில் சமந்தா நடித்த சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். தவிர ‘டிரான்ஸ்போர்ட்டர் 3’, ‘இன்செப்ஷன்’, ‘டன்கிர்க்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். சமந்தாவுடன் பணியாற்றியது குறித்து யானிக் பென் கூறுகையில், ‘சமந்தா ஒரு அர்ப்பணிப்பு மிகுந்த நடிகை. அவரைப் போன்றவர்களை இயக்குவது மிகவும் எளிது. ஆபத்தான காட்சிகளில் ‘டூப்’ போடாமல் அவரே பங்கேற்று நடித்தார். அவரது துணிச்சலையும், வீரத்தையும் நேரில் பார்த்து வியந்தேன்’ என்றார்.

Related Stories: