பண்ணாரி அம்மன் கோயிலில் வடிவேலு சாமி தரிசனம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நேற்றுமுன்தினம் மாலை நகைச்சுவை நடிகர் வடிவேலு திடீரென வந்தார். கோயிலுக்குள் சென்ற வடிவேலு பண்ணாரி அம்மனை, தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில், அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. வடிவேலுவை கண்டவுடன் பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் திரண்டனர். இதனால், அவருடன் சேர்ந்து ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது வடிவேலு, அங்கு பணியாற்றும் பெண் தூய்மை பணியாளரை பார்த்ததும், ‘இதுதான் என் தங்கச்சி’ என நகைச்சுவையுடன் எப்போதும் போல தன் பாணியில் கமெண்ட் அடித்து, அவருடன் போட்டோ எடுத்து கொண்டார். தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் நடக்கும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாக வந்தபோது, பண்ணாரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஆசைப்பட்டதாகவும், மீண்டும் படப்பிடிப்பிற்கு மைசூர் செல்வதாகவும் வடிவேலு தெரிவித்தார்.

Related Stories: