கங்கனாவுக்கு டெங்கு

மும்பை: நடிகை கங்கனா ரனவத்துக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஜான்சி ராணியின் கதையான மணிகர்னிகா படத்தை இயக்கி, அதில் ஜான்சி ராணியாக கங்கனா ரனவத் நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு கங்கனா நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. இந்நிலையில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா நடிக்கும் படமாக எமர்ஜென்சி உருவாகி வருகிறது. இந்த படத்தை மணிகர்னிகா படத்துக்கு பிறகு கங்கனாவே இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் ஷெட்யூலில் பங்கேற்று படத்தை மும்முரமாக இயக்கி வந்தார் கங்கனா. இதற்கிடையில் கடும் காய்ச்சலால் அவர் அவதிப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது தெரிந்தது. மேலும் சில பரிசோதனைகள் கங்கனாவுக்கு மேற்கொள்ளப்பட்டன. இதில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஒரு வாரத்துக்கு வீட்டிலே ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதை மீறி அவர் எமர்ஜென்சி படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

Related Stories: