சரத்குமார் நடித்துள்ள இரை: ஓடிடியில் வெளியானது

சரத்குமார் நடித்துள்ள முதல் வெப் தொடர் இரை. இதனை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். இதில் சரத்குமார் தவிர ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கடாரம் கொண்டான், தூங்காவனம் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கி உள்ளார். சரத்குமாருடன் கிருஷ்ண தயாள், அபிஷேக் சங்கர், நிழல்கள் ரவி, கவுரி நாயர், ஷரிஷா ஆகியோர் நடித்துள்ளார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கி உள்ளார். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் கொடியவர்களை வேட்டையாடும் ஒரு தொடர் கொலையாளி பற்றிய கதை. இதில் சரத்குமார் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியாக நடித்துள்ளார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

Related Stories: