மேகா ஆகாஷுக்கு சல்மான் கான் சிபாரிசு

ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தவர் மேகா ஆகாஷ். தொடர்ந்து பூமரங், வந்தா ராஜாவதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா உள்பட பல படங்களில் நடித்தார். இதற்கிடையே பாலிவுட்டில் வாய்ப்பு வந்து அங்கும் நடிக்க சென்றார். இளம் ஹீரோ சூரஜ் பன்ச்சோலி நடித்த சாட்டிலைட் ஷங்கர் என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்தார். இந்த படத்தை பார்த்த சல்மான் கான், மேகாவுக்கு தனது படத்தில் வாய்ப்பு தந்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படம் ராதே. இதில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மேகா ஆகாஷுக்கு சிபாரிசு செய்தாராம் சல்மான் கான். 

இந்த பட வாய்ப்பு கிடைத்ததில் பூரித்து போயிருக்கிறார் மேகா. ‘இந்தியில் ஒரு படத்தில் தான் நடித்தேன். தொடர்ந்து அங்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் 2வது படமே சல்மான் கானுடன் நடிப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. லாக்டவுன் முடிந்த பிறகு இதன் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறேன்’ என்றார் மேகா ஆகாஷ்.

Related Stories: