தமிழ் படம் இயக்கி நடிப்பேன்: சென்னையில் கிச்சா சுதீப் பேச்சு

சென்னை: டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ், கிச்சா சுதீப்பின் கிச்சா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘மார்க்’. விஜய் கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். கிச்சா சுதீப், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம், விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா, ரோஷிணி நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வரும் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது கிச்சா சுதீப் பேசுகையில், ‘இந்த படத்தில் கதை சொல்லும் முறை, காட்சிகள், நடிப்பு போன்ற விஷயங்களில் நிறைய புதுமையை கொண்டு வந்திருக்கிறோம். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். விஜய் கார்த்திகேயன் கதை, இயக்கம் எனக்கு பிடிக்கும் என்பதால், மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றினேன். எங்கள் படத்திலேயே மிகவும் பிசியான நடிகர் யோகி பாபுதான்.

நடிகர்கள் அவ்வப்போது ஓய்வு எடுப்போம். இப்படத்துக்காக இரவு, பகல் பார்க்காமல் கடினமாக உழைத்தவர்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும்தான். நேரடி தமிழ்ப் படத்தில் என்னை ஹீரோவாக வைத்து, நான் இயக்கி நடிப்பேன். அதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும்’ என்றார். விஜய் கார்த்திகேயன் பேசும்போது, ‘ஏற்கனவே ’மேக்ஸ்’ படத்தில் பணியாற்றிய நாங்கள், அதன் 2ம் பாகத்தை உருவாக்க கதை அமையாததால், ‘மார்க்’ மூலம் இணைந்துள்ளோம். கிச்சா சுதீப்பின் நகைச்சுவை நடிப்பை இதில் பார்க்கலாம். அவரது ரசிகர்களுக்காகவே எழுதிய கதை இது. கண்டிப்பாக படம் வெற்றிபெறும். மூன்றாவது முறையும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்’ என்றார்.

Related Stories: