நான் மோசமான டான்சர்: மாதவன்

தமிழில் அனுஷ்காவுடன் நிசப்தம் படத்தில் நடித்துள்ளார் மாதவன். இதற்கிடையே இந்தி, தமிழ், தெலுங்கில் அவர் இயக்கி வரும் ராக்கெட்ரி படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தில் மாதவன் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். சமீபத்தில் டிவிட்டரில், மாதவன் நடித்த நளதமயந்தி படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த மாதவன், தமிழ் சினிமாவிலேயே மோசமான டான்ஸர் நான்தான் என அதற்கு கமென்ட் செய்திருந்தார். 

தனக்கு டான்ஸ் ஆடுவது என்றாலே அலர்ஜி எனக் கூறும் மாதவன், படத்தில் நடன காட்சி என்றாலே அதில் நடிக்க அதிகம் தயங்குவாராம். மாதவனின் கமென்ட்டை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களது நடனம் அந்த அளவுக்கு மோசமில்லை. நிஜமாகவே மோசமாக ஆடக்கூடிய பலர் இருக்கிறார்கள் என மாதவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர்.

Related Stories: