உதவி இயக்குனராக விரும்பும் பாரதிராஜா

சென்னை 28 படத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட பாரதிராஜா, உடனே இயக்குனர் வெங்கட் பிரபுவை பாராட்டி, ‘இன்னைக்கு இருக்கிற யங்ஸ்டர்ஸ் எப்படித்தான் யோசிக்கிறாங்கன்னு தெரியல. இந்த மாதிரி ஒரு படத்தை என்னால கூட பண்ண முடியாது’ என்று சொன்ன அவர், ‘பேசாம நான் உன்னை மாதிரி யங்ஸ்டர்ஸ் டைரக்டர்கள்கிட்ட ஒரு வாரம் அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணலாம்னு இருக்கேன்’ என்று இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். இதுபோல் கே.பாலசந்தர், கமல்ஹாசன் இயக்கும் படத்தில், அவரிடம் உதவியாளராக பணிபுரிய வேண்டும்’ என்று தன் விருப்பத்தை சொன்னார். சமீபத்தில் கங்கை அமரன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்காக வீடியோவில் பேசிய பாரதிராஜா, வெங்கட் பிரபுவிடம், ‘இன்னைக்கு இருக்கிற இளைஞர்கள் ரொம்ப பவர்ஃபுல்லா யோசிக்கிறீங்க. நிறைய டெக்னிக்கல் விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு, அதை உங்க படத்துல பயன்படுத்தறீங்க. நாங்கள்லாம் இன்னமும் பழைய விஷயங்களையே வெச்சுக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கோம். ஒருமுறை டைரக்டர் எல்.வி.பிரசாத் என்கிட்ட பேசறப்ப, என் படத்துல ஒரு வாரம் அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணணும்னு சொல்லி கேட்டார். சினிமாவில் அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான். ஆனா, இப்ப நான் சொல்றேன். உன்கிட்ட ஒரு படத்துல ஒரு வாரம் நான் அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணி, நீங்க யூஸ் பண்ற டெக்னிக்கல் விஷயங்களை தெரிஞ்சுக்கணும்’ என்றார்.

Related Stories: