மைக் மோகன் - ரசிகர் சந்திப்பு

எண்பதுகளில் தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய ஹீரோ மோகன். எல்லாப் படங்களிலுமே மைக் பிடித்து மேடையில் பாடுவதைப் போன்ற காட்சிகள் இவருக்கு சென்டிமென்டாக அமைக்கப்பட்டிருக்கும். எனவே, ரசிகர்கள் செல்லமாக இவரை மைக் மோகன் என்று அழைப்பார்கள். சமீபத்தில் மோகன், தன்னுடைய ரசிகர்களை சென்னையில் சந்தித்தார்.

சுமார் 200 பேர் மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 500க்கும் மேற்பட்டோர் விஷயம் அறிந்து குழுமிவிட்டனர். தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் மோகனை சந்திப்பதற்காகவே வந்திருந்தனர்.

அனைவரையும் சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டு அன்பாகப் பேசி அனுப்பினார் மோகன்.

Related Stories: