கொடி படத்தை தொடர்ந்து ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தந்தை, மகன் வேடங்களில் நடித்துள்ள படம், பட்டாஸ். வரும் 15ம் தேதி ரிலீசாகிறது. படம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று, அடிமுறை. இது வர்மக்கலையின் இன்னொரு வடிவம். நாளடைவில் மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்ட இந்தக் கலையை தந்தை வேடமேற்றுள்ள தனுஷ், அவரது மனைவியாக வரும் சினேகா பயன்படுத்துகின்றனர்.