முத்தூரில் கொட்டப்பட்ட கழிவுகளால் துர்நாற்றம் : நோய்தொற்று ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி :பொள்ளாச்சி அருகே உள்ள முத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் பாலக்காடு ரோட்டோரம் உள்ள மயானம் அருகே, பல ஆண்டுகளாக கொட்டப்படுவது தொடர்ந்துள்ளது. மேலும், இரவு நேரத்தில் சிலர் வாகனங்களில் கொண்டுவரும் கழிவு பொருட்களையும் கொட்டி செல்வதால், கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.தற்போது, அந்த இடத்தில் மூட்டை மூட்டையாக, கழிவு பொருட்களை கொட்டி செல்வது மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள், இறைச்சிக்கழிவால் உண்டாகும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். சில நேரத்தில் கால்நடைகள் அதனை நுகர்வதுடன், சிதறி போடுவதாலும், மழையாலும் துர்நாற்றம் மேலும் அதிகரிக்கிறது. எனவே, போக்குவரத்து மற்றும் மக்கள் நடமட்டமுள்ள பாலக்காடு ரோட்டோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை  அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post முத்தூரில் கொட்டப்பட்ட கழிவுகளால் துர்நாற்றம் : நோய்தொற்று ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: