ராணுவ பயிற்சி முகாமில் செயலிழந்த 3 ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிப்பு: சிங்கபெருமாள் கோயிலில் பரபரப்பு

சென்னை: செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோயில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வந்தது. தற்போது அது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், பயிற்சி முகாமில் மலை உச்சியில் செயலிழந்த நிலையில் மூன்று ராக்கெட் லாஞ்சர்  ரக பாம் கேட்பாரற்று கிடப்பதாக அப்பகுதியில் மாடு மேய்க்க சென்றவர்கள், மறைமலைநகர் காவல் நிலையத்துக்க தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், தாம்பரம் காவல் மாவட்ட உதவி ஆணையர் சிங்காரவேவன் தலைமையில், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து ராக்கெட் லாஞ்சர் இருப்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து, துறைசார்ந்த கமாண்டோ குழுவினர் நேரில் சென்று, இந்த ராக்கெட் லாஞ்சர் ரக பாம்கள் செயலிழந்ததா, செயல்படக்கூடியதா என ஆராய்ச்சி செய்த பின் அதை இந்த இடத்தை விட்டு அகற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அனுமந்தபுரம் துப்பாக்கி சுடும் பயிற்சி களம் மற்றும் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு, அந்த ராக்கெட் லாஞ்சர்களை பத்திரமாக கமாண்டோ குழுவினர் எடுத்துசென்றனர். கடந்த 3 வருடத்துக்கு முன்பு செயலிழந்த ராக்கெட் லாஞ்சர்களை கயலான் கடை வியாபாரி வீட்டில் பதுக்கி வைத்திருந்தபோது வெடித்ததில் வீடு கூரை இடிந்து விழுந்து சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டதும், விவசாய நிலங்களில் கிடந்த ராக்கெட் லாஞ்சர்கள் வெடித்து விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது….

The post ராணுவ பயிற்சி முகாமில் செயலிழந்த 3 ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிப்பு: சிங்கபெருமாள் கோயிலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: