கிங்டம் விமர்சனம்

கடந்த 1991ல் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, 18 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தன் அண்ணனை தேடுகிறார். அப்போது அநியாயம் செய்த போலீஸ் உயரதிகாரியை அடித்ததால் டிஸ்மிஸ் செய்யப்படுகிறார். அவரது துணிச்சலை பார்த்து வியந்த ஒரு அதிகாரி, அவரை ‘அண்டர்கவர் ஆபரேஷன்’ ஒன்றில் மறைமுகமாக ஈடுபடுத்துகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

ஸ்பை ஆக்‌ஷன் டிராமா ஜானரில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை விஜய் தேவரகொண்டா தனது தோளில் தூக்கி சுமந்துள்ளார். அண்ணனாக சத்யதேவ், அம்மாவாக ரோகிணி, வில்லனாக மலையாள நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பான நடிப்பில் கவனத்தை ஈர்க்கின்றனர். ஹீரோயின் பாக்ய போர்ஸ் வீணடிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாக ஒளிப்பதிவு செய்துள்ள கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். பின்னணி இசையில் அனிருத் பின்னியெடுத்து இருக்கிறார். அதிலும், தீம் மியூசிக்கில் விளையாடியுள்ளார். எடிட்டர் நவீன் நூலி, கலை இயக்குனர், ஸ்டண்ட் இயக்குனர் ஆகியோரின் பணிகளும் குறிப்பிடத்தக்கது. கவுதம் தின்னனூரி இயக்கியுள்ளார். ஏகப்பட்ட கேரக்டர்கள் இருப்பதும், அடுத்து இப்படித்தான் நடக்கும் என்ற கணிப்பும் படத்தை முழுமையாக ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது.

Related Stories: