மமிதா பற்றி முன்பே கணித்த ரஜிஷா

கடந்த 2021ல் வெளியான ‘கோ கோ’ என்ற மலையாள படத்தில் ரஜிஷா விஜயன், மமிதா பைஜூ நடித்தனர். கோ கோ விளையாட்டை மையப்படுத்தி உருவான இதில் அவர்களின் நடிப்பு பாராட்டப்பட்டது. பிறகு இருவரும் முன்னணி நடிகையாக மாறினர். அப்படம் வெளியானபோது, எதிர்காலத்தில் மமிதா பைஜூ தவிர்க்க முடியாத நடிகையாக மாறுவார் என்று ரஜிஷா விஜயன் கூறியிருந்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு ரஜிஷா விஜயன் அளித்துள்ள பேட்டியில், ‘மமிதா பைஜூவின் சுறுசுறுப்பையும், துடிப்பான நடிப்பையும் கண்டு அசந்துவிட்டேன்.

எதிர்காலத்தில் மமிதா பைஜூ மிகச்சிறந்த நடிகையாக வருவார் என்று அப்போதே நான் கணித்தேன். அவர் முன்னணி நடிகையாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது நான் சொன்னபோது யாரும் நம்பவில்லை. அன்று சொன்னது இப்போது நடந்துள்ளது. திரையுலகில் மமிதா பைஜூ மேலும் பல உயரங்களை தொடுவார்’ என்று பாராட்டியுள்ளார்.

Related Stories: