சிம்புவின் 42வது பிறந்தநாளை தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்த ‘சிலம்பாட்டம்’ என்ற படம், நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது. எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படம் குறித்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் கூறுகையில், ‘முன்னதாக இப்படத்தை விஜய், அஜித் குமார் உள்பட பலர் பார்த்து பாராட்டி இருந்தனர். இயக்குனர் எஸ்.சரவணன் பேசும்போது, ‘சிம்புவுக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். நான் ஒரு மாஸ் சீனை எழுதினேன். அதை சிம்பு நடிப்பில் தியேட்டரில் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது’ என்றார்.
டி.ராஜேந்தர் பேசும்போது, ‘காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்ஷன் படத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். எனது மகன் சிம்பு நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. நானும் பல காதல் படங்களை இயக்கியுள்ளேன். அப்படிப்பட்ட என்னையே வியக்க வைத்த படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ஆக்ஷன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது. ஆனால், ‘மங்காத்தா’ மட்டுமே ஹிட்டாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதுபோல், ‘சிலம்பாட்டம்’ படமும் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிபெறும்.
தமிழரசன், விச்சு ஆகிய இரு வேடங்களில் சிம்பு நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில், சிலம்பத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் இயக்கி நடித்த ‘உயிருள்ளவரை உஷா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தயாராக இருந்தபோது, சிம்புவின் படமும் அறிவிக்கப்பட்டதால், எனது மகனுக்காக அப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை மாற்றி வைத்திருக்கிறேன்’ என்றார்.
