காதல் நூலகம்

சென்னை: கே.ஆர்.ராஜமனோகரன் தயாரிப்பில் ‘மலரினும் மெல்லிய’ திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே தமிழ்நாடு அரசு விருது பெற்ற பி. எஸ். செல்வராஜ் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதே கே. ஆர்.ராஜமனோகரன் தயாரிப்பில் ‘காதல் நூலகம்’ என்ற தலைப்பில் இரண்டாவது திரைப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக சிவா வும், கதாநாயகியாக ஐரா அகர்வாலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஜாவா சுந்தரேசன், கூல் சுரேஷ், மற்றும் டி எஸ் ஆர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு -வெங்கிதர்ஷன், இசை – ப்ரித்திவி, எடிட்டிங் – சசிகுமார், பாடல்கள் – கவிதைப் பித்தன், விவேகா, சீர்காழி சிற்பி மற்றும் நவநீத ரமேசு எழுதியுள்ளனர். இந்தப் படத்தைப் பற்றி டைரக்டர் கூறும்போது, காதல் ஒரு அழகான நூலகம். அது கற்றுத் தரும் விஷயங்கள் பல’ என்கிறார். பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தின் முதல் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

Related Stories: