வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடந்து முடிந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு கேமியோ கேரக்டரா அல்லது வில்லன் ரோலா என்று யாரும் சொல்லவில்லை. இந்நிலையில், படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்துக்கு விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்துள்ளார். அதன் காரணமாகவே ‘அரசன்’ படத்தில் இருந்து அவர் விலகியதாக சொல்லப்படுகிறது. முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் 2 பாகங்களில் நடித்த விஜய் சேதுபதி, அப்படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக நடத்தப்பட்டதால், இப்படமும் அதுபோல் மாறிவிடுமோ என்று பயந்து விலகியதாக கூறப்படுகிறது.
