மூன்று மணி நேரத்துக்கு மேல் ஓடும் ‘வாரணாசி’ ராஜமவுலி தகவல்

ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்டமான பான்வேர்ல்ட் படம், ‘வாரணாசி’. இதில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன், பிரகாஷ்ராஜ் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத்தில் நடந்த மிகப் பிரமாண்டமான நிகழ்ச்சியில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் வீடியோ வெளியிடப்பட்டது. முழுவதும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம், வரும் 2027 ஏப்ரல் 7ம் தேதி உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், படம் வெளியாவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே புரமோஷன் செய்ய படக்குழுவினர் தொடங்கிவிட்டனர். சமீபத்தில் ஐதராபாத்தில் பேட்டி அளித்த எஸ்.எஸ்.ராஜமவுலி, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோர், படத்தை பற்றி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர். அதில், ‘வாரணாசி’ படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள எஸ்.எஸ்.ராஜமவுலி, ‘இப்படம் ஒரே பாகமாக வெளியாகும். ஆனால், படத்தின் நீளம் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கும்’ என்றார். இத்தகவல் ரசிகர்களை தெளிவடைய வைத்துள்ளது.

Related Stories: