ஜெய் நடிப்பில் வாமனன், ஜீவா, விநய், திரிஷா நடிப்பில் என்றென்றும் புன்னகை, உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் படங்களை இயக்கியவர் அகமது. இவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்துக்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை. இது ஜெயம் ரவி நடிக்கும் 25வது படமாகும்.