பைக் ரேஸ் படத்தில் அமிதா ராவ்

சென்னையில் அவ்வப்போது சில இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தி மக்களை நடுக்கத்தில் ஆழ்த்துகின்றனர். அப்படியொரு கருவை மையமாக வைத்து உருவாகும் படம் பட்டிபுலம். திருமுருகன் தயாரிக்க, சுரேஷ் இயக்குகிறார். படம்பற்றி இயக்குனர் கூறும்போது,’கிழக்கு  கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கிறது. அங்குள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் படம் விளக்குகிறது.

ஹீரோவாக யோகி பாபு நடிக்கிறார். அவருக்கு பேய் என பெயர் வைத்திருக்கிறோம். இன்னொரு ஹீரோ வீரசமர். ஹீரோயின் அமிதாராவ். இவர் தற்காப்பு படத்தில் நடித்தவர். இவர்களுடன் சேரன்ராஜ், சுப்ரமணி நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு ஆர்.கே.வர்மா. இசை வல்லவன். இம்மாதம் படம் வெளியாகிறது’ என்றார்.

Related Stories: