யூடியூப்பில் விமர்சனம்; செய்வதை தடுக்க முடியாது: ‘தேசிங்கு ராஜா 2’ விழாவில் ஆர்.கே. செல்வமணி

சென்னை: ‘தேசிங்கு ராஜா 2’ படத்தை எஸ்.எழில் இயக்கியுள்ளார். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்க, விமல் நடிக்கிறார். ஹீரோயின்களாக பூஜிதா பொன்னாடா, ஜூஹி, ஹர்ஷிதா நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, புகழ், சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுரை முத்து, முல்லை கோதண்டம் நடித்துள்ளனர். ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகர் இசையில் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். வரும் 11ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், ‘காமெடி படங்களை இயக்குவது மிகவும் கஷ்டம். எனவேதான் நான் இயக்கிய படங்களில் காமெடி காட்சிகள் அதிகமாக இருக்காது. எப்படி நம்மை படம் எடுக்க வேண்டாம் என்று சொன்னால் கோபப்படுவோமோ, அதுபோலத்தான் யூடியூப்பில் விமர்சனம் செய்பவர்களை தடுத்தால் அவர்களுக்கு கோபம் வரும். ஒரு படத்தை பற்றி நல்லதாக விமர்சனம் செய்தால், அதை பார்ப்பதற்கு இங்கு ஆள் இல்லை. விமர்சனம் செய்வதை தடுக்க முடியாது. ஆனால், படம் வெளியாகி ஒருநாள் கழித்து விமர்சனம் செய்யலாம்’ என்றார்.

Related Stories: