அளவில்லா ஆற்றல் தரும் ஸ்ரீஆதிவ்யாதி ஹர ஸ்ரீபக்த ஆஞ்சநேயஸ்வாமி

நங்கைநல்லூர் தமிழகத்தின் சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் ஒட்டி அமைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியை  கொண்டது. நங்கைநல்லூர், பழவந்தாங்கல், தலக்கனன்சேரி மற்றும் ஆதம்பாக்கம் கிராமங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த குடியிருப்புப் பகுதியே நங்கை நல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

சென்னைக்கே உரித்தான பன்முகத் தன்மைகளான பல சமயங்கள், பல இனங்கள், பல மொழிகள் பேசுவோர் மக்கள் இங்கு வாழ்கின்றனர் மீனம்பாக்கம், பழவந்தாங்கல்  மற்றும் பரங்கிமலை ஆகிய தொடர்வண்டி நிலையங்கள் நங்கைநல்லூர் அருகில் உள்ளது.இந்த ஊரில் பல கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக இங்குள்ள 32 அடிக்கு மிக பிரம்மாண்டமாக உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலால் இந்த இடத்தைஅடையாளம்  காட்டி, மிகவும் புகழடைந்துவருகிறது.தட்சிண தீபாலாயம் என்பது இவ்வூரின் புராணப்பெயராகும்.

சோழர்காலத்தில் இவ்வூர் தன்மீச்சுரம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அருகருகே அமைந்துள்ள சோழர்காலத்திய தர்மலிங்கேசுவரர் (தன்மீச்வரர்) என்ற சிவன் கோயிலும், பல்லவர் காலத்திய லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோயிலும் இவ்வூரின் பழமையான கோயிலாகும்.இவை தவிர குறிப்பிட்டு சொல்லத்தக்க உத்திர குருவாயூரப்பன் கோயில், நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், தில்லை கங்கா நகர் இராஜராஜேஸ்வரி கோயில், இராகவேந்திர கோயில், சத்ய நாராயணன் கோயில், தேவி கருமாரியம்மன் கோயில், ஏழூரம்மன் கோயில், ஹயவதன பெருமாள் கோயில், அர்த்த நாரீஸ்வரர் கோயில், லட்சுமி ஹயக்ரீவர் கோயில், ஸர்வ மங்கள நரசிம்மர் கோயில், சித்தி விநாயகர் கோயில் உட்பட பல கோயில்களால் நிறைந்து ‘‘கோயில் நகரம்” என்றும் சின்ன காஞ்சிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இவ்வூருக்கு நங்கைநல்லூர் (திருமகள் வாழும் ஊர்) எனப் பெயரிடப்பட்டு இப்போது நங்கநல்லூர் எனப் பழக்கத்தில் மருவியுள்ளது.

பிரதான சந்நதியில் 32 அடி உயரத்துடன் இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு   ஆஞ்சநேயர்  காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் மேற்கு நோக்கியிருப்பதால், பிரதான நுழைவாயில் மேற்குநோக்கி உள்ளது. கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் தெற்குப் பக்கத்தில் துணை நுழைவாயில் உள்ளது. பிரதான கோயில் கட்டிடத்தில் கருவறையைச் சுற்றி பாதைகள் உள்ளன. வடமேற்கு மூலையில், ராமருக்கு முழு சந்நதி கட்டப்பட்டு, இங்கு சீதையுடன் லட்சுமணனும் ஆஞ்சநேயருடன் வீற்றிருக்கிறார். தெய்வங்கள் கிழக்கு நோக்கி உள்ளன. ராமர் தனது வில்லை ஏந்தியபடி காணப்படுவதால், ராமரின் பாதுகாவலராகவும் ஆட்சியாளராகவும் இங்கு குறிப்பிடப்படுகிறது, எனவே இங்குள்ள இறைவனுக்கு ”கோதண்ட ராமர்” என்று பெயர்.

தென்மேற்கில், ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் கிருஷ்ணருக்கு ஒரு சந்நதி கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் கோயில்களில் ராமர் சந்நதி கட்டப்பட்டாலும், கிருஷ்ணருக்கு சந்நதி கட்டப்படுவது அரிது. இந்திய இதிகாசங்களில் ராமாயணத்தில் ராமரின் நேரடி சீடராகவும், மகாபாரதத்தில் அர்ஜுனனின் தேர்க் கொடியிலும் கடவுள்களில் ஆஞ்சநேயர் மட்டுமே இருந்தார் என்பதை பக்தர்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்தக் கோயிலில் கிருஷ்ணர் சந்நதி கட்டப்பட்டுள்ளது. எதிரிகளால் அழிவிலிருந்து காப்பாற்ற கிருஷ்ணர். கோயிலின் வடகிழக்குப் பகுதியில், ஒரு சிறிய மேடையில், “விநாயகர்” கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார் மற்றும் அவருக்கு இடதுபுறம் மற்றொரு மேடையில் ‘நாகர் சந்நதி’ நிறுவப்பட்டுள்ளது. துறவி ராகவேந்திரர் கிருஷ்ணரை நோக்கி தனது இருப்பிடத்தை எடுத்துள்ளார்.

மகான்களின் ஆசியுடன் 1989 ஆம் ஆண்டு 32 அடி ஸ்ரீஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்து 1995 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 32 அடி சிலையின் தனிச்

சிறப்பு என்னவென்றால், இது ஒரு பாறையில் வடிவமைக்கப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தான் ராஜ ராஜ சோழன் காலத்தில் சிலை பிரதிஷ்டை செய்த பிறகு கோயில் கட்டிடம் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு இம்மாதிரி கட்டப்பட்ட முதல் கோயில் இதுதான் என்று கருதப்படுகிறது. மே மாதம் 20ம் தேதி  வெள்ளிக்கிழமை  ஸ்ரீவைகாநஸ பகவத் சாஸ்திரப் படி  இவ்வாலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்களுக்கு ரக்ஷா பந்தன் நடைபெறும். பக்தர்கள் தான் நினைத்ததை வேண்டி கொண்டு இந்த ரக்ஷாபந்தன் கயிறை கையில் கட்டிக்கொண்டு, ஆறு சனிக்கிழமை இவரைத் தரிசனம் செய்து அந்த ரக்ஷா கயிற்றை விசர்ஜனம் செய்தால் நினைத்த காரியம் வெற்றி அடைவதாக நம்பப்படுகிறது. அது மட்டுமன்றி இந்த ஆஞ்சநேயருக்கு கைவடை மாலை, நிலை (பூர்ண) வடைமாலை பெரும் திரளான  பக்தர்கள் சாற்றி தன்னுடைய நன்றியை காணிக்கை யாக்குகிறார்கள். 21.5.2022 முதல் 4.7.2022 வரை தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேக வைபவம் நடைபெறும்.

Related Stories: