திருவள்ளூர் அருகே கோலம் கொண்ட அம்மன் கோயிலில் இருந்து வேம்புலி அம்மனுக்கு சீர்வரிசை புறப்பாடு

திருவள்ளூர்: ஜாத்திரை உற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் யாத்திரை உற்சவம் கடந்த 2ம் தேதி  தொடங்கியது. ெதாடர்ந்து இன்று முகமது அலி தெருவில் உள்ள ஸ்ரீ கோலம் கொண்ட அம்மன் கோயிலில் இருந்து சகோதரி வீடான வேம்புலி அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மனுக்கு இனிப்பு வகைகள், பழ வகைகள், பலவிதமான மலர்கள், வேட்டி- சேலை ஆகிய சீதனத்துடன் புறப்பட்டு தாரை, தப்பட்டை, பம்பை உடுக்கை‌, சிலம்பு ஆகியவற்றுடன் புறப்பட்டு பஜார் வீதி, வடக்கு ராஜ வீதி, மோதிலால் தெரு, காக்களூர் சாலை வழியாக வேம்புலி அம்மன் கோயிலை அடைந்தது. தொடர்ந்து இரவு வேம்புலி அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை வேம்புலி அம்மன் சேவா சங்கம் மற்றும் கிராமத்தார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்….

The post திருவள்ளூர் அருகே கோலம் கொண்ட அம்மன் கோயிலில் இருந்து வேம்புலி அம்மனுக்கு சீர்வரிசை புறப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: