தமிழக ஆசிரியர் உட்பட 46 பேருக்கு நல்லாசிரியர் விருது: ஜனாதிபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி:  டெல்லியில் நடந்த விழாவில் தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன் உட்பட 46 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார். ஆசிரியராக இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் அரசு பள்ளியின் ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் முதலியார் பேட்டையில் உள்ள அர்ச்சுனா சௌப்ராய நாயக்கர் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் அரவிந்தராஜா உட்பட 46 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டினார். விழாவில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசுகையில். ‘‘அறிவியல், இலக்கியம், சமூக அறிவியல் பாடங்களை நமது தாய்மொழியில் கற்பிக்கும்போது திறமை மேம்படும். இந்தியாவின் பள்ளிக்கல்வி உலகின் மிகப்பெரிய கல்வி முறைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது’’ என்றார்….

The post தமிழக ஆசிரியர் உட்பட 46 பேருக்கு நல்லாசிரியர் விருது: ஜனாதிபதி முர்மு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: