அவதூறான கருத்துகளை பரப்புவதாக கூறி சக நடிகைக்கு தெலுங்கு நடிகை நோட்டீஸ்

ஐதராபாத், ஏப்.8: அவதூறான கருத்துகளை பரப்புவதாக கூறி சக நடிகைக்கு தெலுங்கு நடிகை ஹேமா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தெலுங்கு திரைப்பட நடிகை ஹேமா, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சக நடிகைகளான கராத்தே கல்யாணி மற்றும் திருநங்கை தமன்னா சிம்ஹாத்ரி ஆகியோருக்கு எதிராக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இவர்கள் இருவரும் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அந்த நோட்டீஸில் ஹேமா குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறார். முன்னதாக, சக நடிகையான கராத்தே கல்யாணி, சமூக ஊடகங்களின் மூலம் தனது நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பரப்பி வருவதாக ஐதராபாத் மாதப்பூர் காவல் நிலையத்தில் ஹேமா புகார் அளித்திருந்தார். அதேபோல் நடிகர் நரேஷ் மற்றும் கராத்தே கல்யாணி ஆகியோர் சில யூடியூப் சேனல்களில் அளித்த பேட்டியின் போது, தன்னை அவமதிக்கும் வகையில் அவதூறான வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: