கடந்த சில நாட்களாக வெள்ளித் திரையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மர்மர் திரைப்படத்தின் கதாநாயகன் மெல்வின் பற்றிய சுவாரஸ்யமான தகவல் . இவரின் இயற்பெயர் தேவராஜ் ஆறுமுகம் . இவர் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் மலேசியாவில் இருந்து தமிழ் திரை உலகத்துக்கு வந்துள்ளார், இவர் கூத்துப்பட்டறையில் முறையாக நடிப்புக்கலை பயின்றவர். மலேசிய தமிழ் சினிமாக்களான தனுஷ் மற்றும் தமணி இவரின் சிறந்த நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள், அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடத்தியுள்ளார் மற்றும் சின்னத்திரையில் சிறகடிக்க ஆசை, ஈரமான ரோஜாவே, அன்பேவா, கயல் போன்ற சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
வாய்ப்புகள் தேடி பல ஆடிஷன்களுக்கு சென்றபோது இயக்குனர் ஹேம்நாத்தை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு மர்மர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மர்மர் திரைப்படத்தில் வரும் திகில் காட்சிகள் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். தனது முதல் திரைப்படத்திலையே மிகப்பெரிய வெற்றி கொடுத்த அதிர்ஷ்டசாலி கதாநாயகனாக தமிழ் திரையுலகில் வளம் வந்து கொண்டிருக்கிறார்.