மீண்டும் தமிழுக்கு வரும் மீனாட்சி சவுத்ரி

சென்னை: தமிழில் ‘கோமாளி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பிறகு ‘லவ் டுடே’ என்ற படத்தை எழுதி இயக்கி ஹீரோவாக அறிமுகமானவர், பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்படங்களின் தொடர்ச்சியான வெற்றி மற்றும் வசூல் சாதனையின் மூலம் தமிழ் சினிமாவின் சென்சேஷனல் ஹீரோவாக மாறியுள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகிறது. அடுத்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் பிரீ-புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் அவரது ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். முன்னதாக அவர் ‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Related Stories: