இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜன  16, சனி:  திரிதியை. திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருவீதிவுலா. தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு. உழவர் திருநாள்.

ஜன 17, ஞாயிறு: சதுர்த்தி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவம் ஆரம்பம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

ஜன 18, திங்கள்: பஞ்சமி. மகாவியதீபாதம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்  பூத வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதிவுலா. திருநெல்வேலி சாலைக்குமார சுவாமி வருஷாபிஷேகம்.

ஜன 19, செவ்வாய்: சஷ்டி. பிள்ளையார் நோன்பு. மீனாட்சி சொக்கர் பவனி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு. கலிகம்ப நாயனார் குரு பூஜை. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.

ஜன 20, புதன்: சப்தமி. திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் சுந்தரேஸ்வரர் வெள்ளி சூரிய பிரபை திருவீதிவுலா. திருச்சேறை சாரநாதர் உற்சவாரம்பம்.

ஜன 21, வியாழன்: அஷ்டமி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் பவனி, காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட சேவை. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பவனி. கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி உற்சவாரம்பம். நமச்சிவாயமூர்த்தி நாயனார் குருபூஜை.

ஜன 22, வெள்ளி : நவமி. கோயமுத்தூர் பாலதண்டாயுதபாணி சூரிய பிரபையில் பவனி. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. திருச்சேறை சாரநாதர் பரமபதநாதர் திருக்கோல காட்சி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சை குதிரையில் பவனி.

Related Stories:

>