இந்நிலையில் சமீபத்தில் சூர்யா அளித்த பேட்டியொன்றில், ‘‘எங்கள் குழந்தைகளின் படிப்புக்காகத்தான் நாங்கள் குடும்பத்துடன் மும்பைக்கு குடிப்பெயர்ந்தோம். மும்பையில் அதிகப்படியான சர்வதேச பள்ளிகள் இருப்பதால் மும்பைக்கு குடிப்பெயர்ந்தோம்’’ என்று கூறியிருக்கிறார் சூர்யா. இதற்கிடையில் பாடகி சுசித்ரா கூறும்போது, ‘‘ஜோதிகா இந்தி படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். அதற்கு வசதியாகவே அவர்கள் மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார்கள். 50 வயதாகும் சூர்யாவும் இந்தி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இவைதான் அவர்கள் மும்பைக்கு ஷிப்ட் ஆக முக்கிய காரணம்’’ என தெரிவித்திருந்தார்.
