சென்னை: ஆவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மெய் சர்வதேச குறும்பட விழா நடைபெற்றது. இந்த குறும்பட விழாவில் தமிழ்,இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குறும்படங்களை கல்லூரி மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் எம் ராஜேஷ், சுசீந்திரன், பொன்ராம், ஒளிப்பதிவாளர் செழியன், இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ், பாட்டில் ராதா படத்தின் இயக்குனர் தினகரன் சிவபாலன், இசையமைப்பாளர் சத்யா, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், நடிகர் அப்பு குட்டி, மற்றும் 2கே லவ் ஸ்டோரி படத்தின் பட குழுவினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மெய் சர்வதேச திரைப்பட விழா நான்காம் ஆண்டு வெற்றிகரமாக அடி எடுத்து வைக்கிறது.
இதன் இயக்குனர் செல்வராம் மற்றும் ஜூரி தயாளன் [இயக்குனர்], ஜூரி ராகவன்[இயக்குனர்]. பிரெண்ட்ஸ் பிலிம் பெக்டரி இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எம்.பி.கோபி, எஸ்.ஜெயசீலன்[விழா தயாரிப்பாளர்] கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிறந்த மூன்று குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் முதல் பரிசாக 1 லட்சம், 2ஆம் பரிசாக 50 ஆயிரம், 3ஆம் பரிசாக 30 ஆயிரம் என ரொக்கப் பணம், சான்றிதழ் மற்றும் பரிசுகோப்பைகள் வழங்கி சிறப்பித்தனர்.
