பலன் தரும் ஸ்லோகம் (செல்வ வளம் பெருக்கும் திருமகள் துதி)

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே

ஸங்க சக்ரகதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வக்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ

ஸர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

- இந்திரன் துதித்த லட்சுமி ஸ்தோத்திரம்

பொதுப் பொருள்: மகாலட்சுமி தேவியே நமஸ்காரம். நீயே மகாமாயையாகத் திகழ்கிறாய்; ஸ்ரீபீடம் எனும் உலகின் உயர் பீடத்தில் வாசம் செய்பவள்; தேவர்களால் பூஜிக்கப்பட்டவள். உனக்கு நமஸ்காரம்.  சங்கு, சக்கரம், கதை இவற்றை கரங்களில் தாங்கி பக்தர்களின் இன்னல் போக்கும் மகாலட்சுமி தேவியே நமஸ்காரம். எங்கும் வியாபித்திருப்பவள் நீ. எல்லோருக்கும் வரமளித்துக் காப்பவள் நீ. தீயவர்களுக்கெல்லாம் பெரும் பயத்தைக் கொடுப்பவள் நீ. எல்லா வகையான துக்கங்களையும் துடைத்து ஆறுதல் அளிப்பவள் நீ. மகாலட்சுமி தாயே நமஸ்காரம். எங்களைக் காத்தருள்வாயாக.  (இந்தத் துதியைப் பாராயணம் செய்தால், திருமகள் திருவருளால் துக்கங்கள் விலகி லட்சுமி கடாட்சம் கிட்டும்.)

Related Stories: