மும்பை: இந்தியில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற ஆந்தாலஜி படத்தில் தமன்னாவும், விஜய் வர்மாவும் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி இருந்தனர். இந்நிலையில், தமன்னாவை விஜய் வர்மா பிரிந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், தமன்னா வெளியிட்டிருந்த ஒரு பதிவு. இதையடுத்து தமன்னா வெளியிட்ட புதிய பதிவில், ‘காதலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எதிரில் உள்ளவர்களுக்கு ரகசிய ஆர்வத்தைக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவர் உங்களை அழகாகப் பார்க்க வேண்டும் என்றால், முதலில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அழகாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதைப் படித்த அவரது ரசிகர்கள், தமன்னா இப்படியொரு பதிவை வெளியிட காரணம் என்ன என்றும், அவரது காதலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என்றும் கேள்வி கேட்டுள்ளனர்.
தமன்னா, விஜய் வர்மாவுக்கு இடையே லேசான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக பாலிவுட்டில் இன்னொரு தகவல் பரவி வருகிறது. ஆனால், அதுபற்றி இருவரும் இதுவரை பதிலளிக்கவில்லை. தமன்னா தனக்கு நெருக்கமான ஒருவரைப் பற்றி பதிவு வெளியிட்டுள்ளதால், ஒருவேளை தமன்னா தனது காதலர் விஜய் வர்மாவை விட்டுப் பிரிந்துவிட்டாரோ என்ற யூகத்தின் அடிப்படையில் வதந்திகள் பரவியுள்ளது.
