படம் குறித்து ஜோசுவா சேதுராமன் கூறுகையில், பெண்களுக்கான விடுதலை என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமானது என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கியுள்ளோம். இன்சூரன்ஸ் கம்பெனி ஏஜெண்ட் வேடத்தில் ஹரி கிருஷ்ணன், அவரது மனைவியாக வலிமையான கேரக்டரில் லிஜோமோல் ஜோஸ், ஓவியராக லாஸ்லியா நடித்துள்ளனர். இதில் படத்தின் தொடக்கத்தில் லாஸ்லியா வரைய ஆரம்பிக்கும் ஒரு ஓவியம், வரைந்து முடித்ததும் கிளைமாக்ஸ் இடம்பெறுகிறது. அந்த ஓவியத்துக்கும், கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சில வசனங்களை ‘மியூட்’ செய்துள்ளனர். ‘கட்’ எதுவும் கிடையாது’ என்றார்.
ஜென்டில்வுமன் படத்துக்கு சென்சாரில் கெடுபிடியா? இயக்குனர் பேட்டி
- சென்னை
- லிஜோமால் ஜோஸ்
- ஹரிகிருஷ்ணன்
- லாஸ்லியா
- ஜோஷ்வா சேதுராமன்
- டான் சாண்டீ
- கோமலா ஹரி படங்கள்
- ஒரு துளி பெருங்கடல் படங்கள்
