இதுகுறித்து துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் பேசுகையில், `இன்னும் சில மாதங்களில் மும்பைநகரில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. படத்தின் இயக்குனரான சித்தார்த் ஆனந்த், மிகவும் கண்டிப்பானவர். இதற்கு முன்பு நான் நடித்த `பதான்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். எனவேதான் அவர் மிகவும் கண்டிப்பானவர் என்று நான் சொல்கிறேன். படத்தைப் பற்றி எந்த விஷயத்தையும் வெளியே சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புடன் அவர் சொல்லி இருக்கிறார். எனவே, நான் நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றி எந்த விஷயத்தையும் சொல்ல முடியாது. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உறுதி. இந்தப் படம் நிச்சயமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்’ என்றார். பிறகு அவர் தனது பாடல்களுக்கு துள்ளலாக நடனம் ஆடினார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஷாருக்கானும் மகிழ்ந்தார்.
