மாரடைப்பால் மரணம் அடைந்த இயக்குனரின் படம் 24ம் தேதி ரிலீசாகும்: குழந்தைகள் முன்னேற்றக் கழகம்

சென்னை: மீனாட்சி அம்மன் மூவிஸ் தயாரித்துள்ள படம், ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. இன்றைய அரசியல் குறித்து காமெடியுடன் சொல்லும் படமாக உருவாக்கப்பட்டுள்ள இது, வரும் 24ம் தேதி ரிலீசாகிறது. கார்த்தி நடித்த ‘சகுனி’ என்ற படத்தை இயக்கிய என்.சங்கர் தயாள், பிறகு விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். சில காரணங்களால் அப்படம் உருவாகவில்ைல.

பல வருட இடைவெளிக்கு பிறகு ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்ற படத்தை அவர் எழுதி இயக்கினார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த அவர், திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதில், முதன்மை வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். அருண்குமார் சம்பந்தம், என்.சங்கர் தயாள் தயாரித்துள்ளனர். ஜே.லஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, ‘சாதகப் பறவைகள்’ சங்கர் இசை அமைத்துள்ளார்.

Related Stories: