தமிழில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அஜித் குமார், கார் ரேஸிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தனது ரசிகர்களுக்காக துபாய் கார் ரேஸிங் தளத்தில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அவர், ‘மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நிறைய ரசிகர்கள் என்னை பார்க்க வந்திருந்தார்கள். அதை பார்க்கும்போது ரொம்ப எமோஷலாக இருந்தது. நீங்கள் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும், மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று கடவுளிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.
முதலில் உங்கள் குடும்பத்தை நன்கு கவனியுங்கள். எப்போதுமே நேரத்தை வீணடிக்காதீர்கள். கவனமாக படியுங்கள். வேலைக்கு செல்பவர்கள், கடுமையாக உழையுங்கள். வெற்றி அடைந்தால் நல்ல விஷயம். தோல்வி ஏற்பட்டால் உடனே துவண்டு விடாதீர்கள். போட்டி என்பது மிகவும் முக்கியம். லவ் யூ ஆல். திரைத்துறையும், ரேஸிங்கும் ஒன்றுதான்.
இரண்டிலும் அதற்கான உழைப்பை கொடுத்தால், அதற்கான பலன் தானாக கிடைக்கும். தயவுசெய்து சண்டை போடாதீர்கள். நமக்கான நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. சந்தோஷமாக இருங்கள். உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அட்வைஸ் செய்துள்ளார். இதை அவரது தீவிர ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.