மகளிர் பிரிவில் இந்தியா-2 வெற்றி

செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவு 8வது சுற்றில் குரோஷியாவை நேற்று எதிர்கொண்ட இந்தியா-2 அணி 3.5க்கு .5 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது. இந்திய வீராங்கனைகள் அவந்திகா அகர்வால், பத்மினி ராவுத், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றியை வசப்படுத்தி தலா 1 புள்ளி பெற்றனர். குரோஷியாவின் டிஹனா இவெகோவிச்சுடன் மோதிய மேரி ஆன் கோம்ஸ் டிரா செய்து அரை புள்ளி பெற்றார். உக்ரைன் – இந்தியா-1 மோதிய 8வது சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் களமிறங்கிய கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி, வைஷாலி, தானியா சச்தேவ் ஆகிய நால்வருமே தங்கள் ஆட்டங்களை டிரா செய்து தலா அரை புள்ளி பெற்றனர். மற்றொரு 8வது சுற்றில் போலந்து அணியை எதிர்கொண்ட இந்தியா-3 அணி 1-3 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது. கர்வாடே ஈஷா, விஷ்வா வஸ்னவாலா டிரா செய்த நிலையில், நந்திதா மற்றும் பிரத்யுஷா போராடி தோற்றனர்….

The post மகளிர் பிரிவில் இந்தியா-2 வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: