பலாத்கார மிரட்டல் விடுத்த நபர்: நிதி அகர்வால் போலீசில் புகார்

ஐதராபாத்: பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடிகை நிதி அகர்வால் போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியுடன் ‘பூமி’, சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்களில் நடித்தவர் நிதி அகர்வால். தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ஹரி ஹர வீர மல்லு படத்திலும் பிரபாஸ் ஜோடியாக ராஜா சாப் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசில் அவர் நேற்று புகார் ஒன்றை அளித்தார்.

அதில் நிதி அகர்வால் கூறியிருப்பதாவது: சமூக வலைத்தளத்தில் என்னை பின்தொடரும் நபர் ஒருவர், தொடர்ந்து என்னை தரக்குறைவாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வந்தார். திடீரென என்னையும் என் குடும்பத்தாரையும் கொல்வதாகவும் என்னை பலாத்காரம் செய்யப்போவதாகவும் மிரட்டுகிறார். இதனால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். சம்மந்தப்பட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நிதி அகர்வால் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: